Wednesday, 22 June 2011

பெண்ணுக்கு ராஜ்ஜியம்...

என் தகப்பனார் திரு. சிலேடைக்கவி. மதிவாணன் எழுதிய கவிதை.....

பூக்களைச் சுற்றி முள்ளிருப்பது
அவற்றைக் காப்பதற்கல்ல;
காற்றில் ஆடும்போது
காயப்படுத்தவே!
நாம் பெண்ணிடம் எதிர்பார்ப்பது தலைமையை அல்ல;
தாய்மையையே!
குணத்தில் அவள் பிள்ளைப் பூச்சியாய்,
நடைமுறையில் பிள்ளைத்தாய்ச்சியாய்,
அடுப்பில் நெருப்பு;
குடத்தில் நீர்
பார்வையில் நிலம்
மூச்சுச் சிக்கனத்தில் காற்று-
சமையலறைக் கூரையில் வானம்!
பெண்ணின் பஞ்ச பூதங்கள் இவையே!
எண்ணுக்குள் பூஜ்யம்
பெண்ணுக்கு ராஜ்ஜியம்...